தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனயில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரின் மனைவி விஜயகுமாரி, மகள் அஸ்வதா வர்ணிகா ஆகியோரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.