ஐ.பி.எல். போட்டிக்கு பயிற்சி எடுப்பதற்காக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி உட்பட வீரர்கள் அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் அடுத்த மாதம் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றன. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்கள் சென்னையில் ஒரு வார காலம் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
அதற்காக தனி விமானம் மூலம் கேப்டன் தோனி, வீரர்கள் சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா, பியூஸ் சாவ்லா, தீபக் சஹார் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். வீரர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு வார காலத்திற்கு பயிற்சியில் ஈடுபடும் சி.எஸ்.கே. வீரர்கள், இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகம் செல்கின்றனர்.