சென்னை மணலி அருகே இருப்பு வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட்டில் 2வது கட்டமாக சுமார் 216 டன் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது.
லெபனான் வெடிவிபத்துக்கு காரணமான அம்மோனியம் நைட்ரேட் சென்னை மணலியில் சுங்கத்துறை கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பலதரப்பினரின் அழுத்தத்தால் அதனை ஏலம் எடுத்த ஐதராபாத்தை சேர்ந்த சால்வோ நிறுவனத்துக்கு இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக் கடந்த ஞாயிறன்று 10 கண்டெய்னர்களில் சுமார் 181 டன் வேதிப்பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில் 2ம் கட்டமாக இன்று சுமார் 216 டன் அம்மோனியம் நைட்ரேட் 12 கண்டெய்னர்களில் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது. மீதமுள்ள 15 கண்டெய்னர்களை நாளைக்குள் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.