சென்னையில் 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் பலத்த பாதுகாப்புடன் நாளை ஹைதராபாத் செல்கிறது. சென்னை மணலி கிடங்கில் தற்போது 690 டன் அம்மோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
லெபனான் நாட்டில் நடந்த வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து, இதனை பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதனை அடுத்து முதற்கட்டமாக 10 கண்டெய்னர்கள் மூலம் இவை ஐதராபாத் கொண்டு செல்லப்படுகிறது .
மின்னணு ஏலம் மூலம் முதற்கட்டமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு இவை விநியோகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போதைய நிர்பந்தத்தால் மீண்டும் தேர்வு செய்து விநியோகம் செய்யப்பட உள்ளது.
மீதமுள்ள 27 கண்டெய்னர்கள் அடுத்த வாரம் இடமாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அம்மோனியம் நைட்ரேட் கண்டெய்னர்கள் உரிய பாதுகாப்போடு அகற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.