ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 43 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி சவரன் தங்கம் விலை 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதன்பிறகும் விலை உயர்ந்தபடி உள்ளது. நேற்று கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 374 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 42 ஆயிரத்து 992 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 42 ரூபாய் உயர்ந்து, 5 ஆயிரத்து 416 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 336 ரூபாய் அதிகரித்து 43 ஆயிரத்து 328 ரூபாயாகவும் உள்ளது.
கிலோ வெள்ளியின் விலை நேற்று 81 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்தது. அந்த விலை இன்று 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 83 ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது.