பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காசிபூரில் இருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றார். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
அப்பதவியை வகித்து வந்த கிரிஷ் முர்முவின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனிடையே, மத்திய அரசின் புதிய தலைமை தணிக்கை அதிகாரியாக கிரிஷ் முர்மு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.