இலங்கை நாடளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
225 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற தேர்தலில், 71 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகளை எண்ணும் பணி 66 மையங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கியது.
இந்த தேர்தலில், மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா, ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி என மும்முனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் கருத்துக் கணிப்பில், சுமார் 28 லட்சம் பேர் யாருக்கு வாக்களிப்பது என தெரியவில்லை என கூறியிருந்த நிலையில், அவர்களே தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கூறப்படுகிறது.