ஆன்லைன் வகுப்புகளுக்காக பஞ்சாப் மாநிலத்தில் வரும் கல்வியாண்டில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஐம்பதாயிரம் ஸ்மார்ட்போன்கள் விநியோகம் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது, மீதமுள்ள ஸ்மார்ட் போன்களை வரும் நவம்பர் மாதத்திற்குள் விநியோகிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
501 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களில் பன்னிரண்டாம் வகுப்பு தொடர்பான பாடங்களுடன் கூடிய இ சேவா என்ற செயலியும் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் என பஞ்சாப் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.