அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
அடிக்கல் நாட்டு விழாவிற்காக, 2,000 ஆலயங்களின் புனித மண், 100 நதிகளின் புனித நீர் அனுப்பப்பட்டது
அயோத்தியில் மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக கோவில் அமையவுள்ளது
நகரா என்ற கோவில் கட்டிடக் கலை பாணியில் ராமர்கோவில் கட்டப்பட உள்ளது
10 ஏக்கரில் கோயிலும், மீதமுள்ள 57 ஏக்கர் கோயில் வளாகமாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
மொத்தம் 161 அடி உயரம், மூன்றடுக்கு, 5 மண்டபங்கள், ஒரு கோபுரத்தை கொண்டதாக இக்கோயில் வடிவமைக்கப்பட உள்ளது
இந்தக் கோயிலில் அமையவுள்ள மொத்த தூண்களின் எண்ணிக்கை 360.
ரூ.300 கோடி மதிப்பீட்டில் கோயில் கட்டப்பட உள்ளது
சந்திரகாந்த்பாய் சோம்புரா தான், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணியின் தலைமை கட்டட கலைஞர்
30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள 2 லட்சம் கற்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன
ராமர் கோயிலை முழுவதுமாக கட்டி முடிக்க குறைந்தப்பட்சம் மூன்றரை ஆண்டுகள் ஆகும் : ஆசிஷ் சோம்புரா
புதிதாக கட்டப்படும் அயோத்தி ராமர் கோவிலில் ஒரே நேரத்தில் 50ஆயிரம் பேர் வரை தரிசிக்க முடியும்
1989ல் பக்தர்கள் அனுப்பிய 9 செங்கல்கள் பூஜையில் பயன்படுத்தப்பட்டுள்ளன
அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரை
ராமர் கோவில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது - யோகி ஆதித்யநாத்
ராமர் கோவில் கட்டுவதற்கான 500 ஆண்டுகால பயணம் சட்டபூர்வ ஒப்புதலையும் பெற்றுள்ளது- யோகி ஆதித்யநாத்
பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு உ.பி. முதலமைச்சர் நன்றி- யோகி ஆதித்யநாத்
இந்த தருணத்திற்கு எத்தனையோ பேர் தியாகம் செய்துள்ளனர்- யோகி ஆதித்யநாத்
ராமர் கோவில் அறக்கட்டளை இனி கோவில் கட்டும் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்- யோகி ஆதித்யநாத்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை நாட்டு மக்கள் தற்போது பார்த்துக் கொண்டிருக்கின்றனர்- யோகி ஆதித்யநாத்
இந்த தருணத்திற்காக தலைமுறை தலைமுறையாக நாம் காத்திருந்தோம்- யோகி ஆதித்யநாத்
ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரை
ராமர் கோவில் பூமி பூஜை மிகப்பெரிய திருப்தியை கொடுத்துள்ளது - மோகன் பகவத்
நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணம் இது - மோகன் பகவத்
இந்த தருணத்திற்காக ஏராளமானவர்கள் செய்த தியாகத்தை நாம் தற்போது நினைத்துப்பார்க்க வேண்டும் - மோகன் பகவத்
ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாடு முழுவதும் மகிழ்ச்சி, உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது - மோகன் பகவத்
ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - மோகன் பகவத்
ராமர் கோவில் பூமி பூஜையை எல்.கே.அத்வானி தனது வீட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் - மோகன் பகவத்
விழாவில் ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ் உரை
எவ்வித தாமதமும் இன்றி ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் - அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ்
ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வின் அடையாளமாக அஞ்சல்தலை வெளியீடு
பிரதமர் மோடி உரை
ஜெய்ஸ்ரீராம் எனும் முழக்கத்துடன் உரையை தொடங்கினார் மோடி
ஜெய்ஸ்ரீராம் எனும் முழக்கம் உலகம் முழுவதும் இன்று எதிரொலிக்கிறது- மோடி
உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு எனது வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன் - மோடி
ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை எனது பாக்கியமாக கருதுகிறேன்- மோடி
ராமர் கோவில் பூமி பூஜைக்கு அறக்கட்டளை எனக்கு விடுத்த அழைப்பால் பெருமை கொள்கிறேன்- மோடி
ஒரு கட்டத்தில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவோம் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள்- மோடி
பல தலைமுறைகளாக பலர் ராமர் கோவிலுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர்- மோடி
பல ஆண்டுகள் காத்திருப்பிற்கு இன்று முடிவு கிடைத்துள்ளது-மோடி
குழந்தை ராமருக்கு கோவில் கட்டும் பணிகள் தற்போது துவங்கிவிட்டது-மோடி
ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் களத்தில் இறங்கி போராடினர்-மோடி
இந்தியர்களின் தியாகம், போராட்டம் காரணமாக ராமர் கோவில் எனும் கனவு நனவாகியுள்ளது-மோடி
ராமர் கோவிலுக்காக போராடிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்-மோடி
ஒவ்வொரு நாளும் நமக்கு கடவுள் ராமர் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்-மோடி
வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை நேரில் பார்த்த மன நிறைவு ஏற்பட்டுள்ளது-மோடி
தியாகம், விடாமுயற்சியின் வெளிப்பாடாக ராமர் கோவில் அமைய உள்ளது-மோடி
ராமர் கோவில் நமது கலாச்சாரத்தின் நவீன அடையாளமாக திகழும் -மோடி
நம்பிக்கை, அன்பு மற்றும் அர்ப்பணிப்புகளை நமக்கு உணர்த்துவதாக ராமர் கோவில் இருக்கும்-மோடி
ராமர் கோவில் அமைய உள்ள பிரதேசத்தின் பொருளாதாரம் மேம்படும்-மோடி
அயோத்தி மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது-மோடி
அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் தேசத்தை ஒருங்கிணைக்கும்-மோடி
அயோத்தி ராமர் கோவில் ஒற்றுமைக்கு ஒரு பாலமாக அமையும்-மோடி
கொரோனா காரணமாக ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வில் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற நேரிட்டது-மோடி
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது-மோடி
அயோத்தி வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து இந்தியர்கள் மனதில் நல்லிணக்கத்தை கொண்டு செயல்பட்டனர்-மோடி
ராமர் கோவில் கட்ட செங்கல், மண் மற்றும் புனித நீர் இந்தியா முழுவதிலும் இருந்து வந்துள்ளது-மோடி
உண்மையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று ராமர் நமக்கு போதித்துள்ளார்-மோடி
சின்னஞ்சிறு உயிர்களிடம் இருந்து கூட ராமர் உதவிகளை பெற்றுக் கொண்டார்-மோடி
வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ராமர் கோவிலும் உதாரணமாக திகழும்-மோடி
கடவுள் ராமர் எங்கும் இருப்பவர், கடவுள் ராமர் எல்லோருக்கும் சொந்தமானவர்-மோடி
உலகின் பல்வேறு மொழிகளில் ராமாயணம் எழுதப்பட்டுள்ளது-மோடி
கம்போடியா, மலேசிய மொழிகளில் கூட ராமாயணம் உள்ளது-மோடி
பல்வேறு நாடுகளிலும் ராமர் வழிபடப்பட்டு வருகிறார்-மோடி
தாய்லாந்து, லாவோஸ் போன்ற நாடுகளிலும் ராமர் வழிபாடு உள்ளது-மோடி
ராமாயணம் தமிழில் கம்பரால் எழுதப்பட்டுள்ளது -மோடி
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இன்று மகிழ்ச்சியாக உள்ளனர்-மோடி
ராமர் மிகச்சிறந்த நிர்வாகத்தின் அடையாளம்-மோடி
இந்தியாவின் அண்டை நாட்டு மக்களின் கலாச்சாரங்களில் கூட ராமர் வழிபாடு உள்ளது-மோடி