கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி, பூ, பழ கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
திருமழிசை சந்தையில் போதிய வசதிகள் இல்லாததால் டன் கணக்கில் காய்கறிகள் வீணாகின்றன என்று குற்றம்சாட்டிய விக்கிரமராஜா, கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார் என்று கூறினார்.
கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகள் மறுபடியும் அதே வியாபாரிகளுக்குத்தான் கிடைக்கும் என்றும், இதுதொடர்பாக வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் பதிலளித்தார்.