2019ம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடிமை பணிகள் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைபணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து 2020 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை ஆளுமை திறன் குறித்த நேர்முக தேர்வுகளும் நடத்தப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
829 பேர் தேர்வு செய்யப்ப்பட்டுள்ள நிலையில், பிரதீப் சிங் என்பவர் தேசியளவில் முதலிடத்தையும், ஜேட்டின் கிஷோர் மற்றும் பிரதீபா வர்மா ஆகியோர் 2 மற்றும் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர், தேசியளவில் 7வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.