ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிண்டி ஆளுநர் மாளிகை வளாக காவலர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு ஏற்கெனவே கொரோனா உறுதியான நிலையில், அண்மையில் உதவியாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர் ஆலோசனையின்பேரில் ஆளுநர் 7 நாள்கள் சுயதனிமை படுத்திக் கொண்ட நிலையில், அங்கேயே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் காலை 11 மணியளவில் காவேரி மருத்துவமனையிலுள்ள அறை எண் 424இல் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆளுநர் மாளிகை அல்லது காவேரி மருத்துவமனை தரப்பு அறிவிப்பு வெளியிட்டால்தான் கூடுதல் தகவல்கள் தெரிய வரும். இதனிடையே, ஆளுநரின் மேலும் ஒரு உதவியாளர் கொரோனா உறுதியாகி, கிண்டி கிங் இன்ஸ்டியுட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.