செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு : விரைந்து சட்டம் இயற்ற உத்தரவு

Jul 27, 2020 02:18:14 PM

மருத்துவ படிப்புகளில் அகில  இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு  இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீட்டின் அளவு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது.

மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதேசமயம், இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதம் ஏற்க முடியாதது என்றும், மாநில இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என மருத்துவ கவுன்சிலில் எந்த விதிகளும் இல்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மருத்துவ படிப்புகளில் அகில  இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத பிற கல்வி நிலையங்களில் இத்தகைய ஓபிசி இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித  தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மத்திய - மாநில அரசுகளின் சுகாதார துறை அதிகாரிகள் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும், மூன்று மாதங்களில் அதை மத்திய அரசு  அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, அகில இந்திய மருத்துவ சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க 3 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ பி சி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டிற்கான உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து, மத்திய அரசு மேல் முறையீடு செய்யாது என நம்புவதாக அமைச்சர்  ஜெயக்குமார் கூறியுள்ளார். 3 மாதத்தில் மத்திய அரசு குழு அமைத்து இந்த இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை, இதை சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
வயல் வெளியில் உலாவிய முதலை மீட்பு - வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் கொடுத்த மக்கள்..
த.வெ.க. மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என தகவல்..
தலப்பாகட்டி ஹோட்டல் வெஜிடபிள் பிரியாணியில் கிடந்த பூரான் - போலீஸார் விசாரணை
ஆவடி ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் பயணிகள்..
மதுபோதையில் பேருந்தை இயக்கிய பேருந்து பணிமனை மெக்கானிக் - காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து
பழநி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வி.சி.க தலைவர் திருமாவளவன் .!
கோவை அருகே ஏடிஎம் மில் பணம் எடுத்துத் தருவது போல் மோசடி செய்த நபர் கைது
முடங்கிய கோயம்பேடு மார்க்கெட் - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்..
சாய்ராபானுவுடன் விவாகரத்து- ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்..
சென்னையில் இளைஞர் மற்றும் இளம் பெண் மீது கத்தியால் தாக்கிய மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement