புதுச்சேரியில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக இதுவரை ஒன்பது கோடியே 16 லட்சம் ரூபாய் வந்துள்ளது என்றார்.
மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 700 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் எனவும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை 2,421 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது.