மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 61 பேரில் 43 பேர் இன்று எம்.பி.க்களாக பொறுப்பேற்க உள்ளனர்.கடந்த மார்ச் மாதம் நடக்க வேண்டிய இந்த 61 இடங்களுக்கான தேர்தல் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் தான் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் புதிய உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவதாக, அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு முடிவு செய்தார்.
பாஜகவின் 18 பேர், காங்கிரசில் இருந்து 10 பேர், பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து தலா 4 பேர் உள்பட 43 பேர் இன்று பதவி ஏற்றுக் கொள்கின்றனர். இந்த காலகட்டத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்ற திமுக தலைவர் ஸ்டாலினின் முடிவு படி அந்தகட்சியை சேர்ந்தவர்கள் பதவி ஏற்க செல்லவில்லை. நாடாளுமன்ற வரலாற்றில், மாநிலங்களைவை நடக்காத நேரத்தில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பது இதுவே முதல் தடவையாகும்.