செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

உலகின் எந்த சக்தியாலும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட அபகரித்து விட முடியாது -ராஜ்நாத் சிங்

Jul 17, 2020 04:20:56 PM

லடாக் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். உலகின் எந்த சக்தியாலும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட அபகரித்து விட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். இன்று காலை லே விமான நிலையம் சென்று இறங்கிய அவர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் நரவானே ஆகியோருடன், ஸ்டக்னா (Stakna) என்ற முன்களப் பகுதிக்கு சென்றார். அங்கு, அவர் முன்னிலையில், டி-90 பீஷ்மா டாங்குகள் இயக்கிக் காட்டப்பட்டது.

இந்த டி-90 பீஷ்மா டாங்குகள், கால்வன் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு கடந்த ஜூன் மாதத்தில் கொண்டு செல்லப்பட்டன. சீன ராணுவம் எல்லைக்கு அருகே படைநிலைகளை வலுப்படுத்தியதைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக இந்தியாவும் கனரக ஆயுத தளவாடங்களை நகர்த்தியது.

அதில், டி-90 பீஷ்மா டாங்குகள் முக்கியமாக இடம்பெற்றன. அவற்றின் வல்லமையை தெரிவிக்கும் வகையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இயக்கிக் காட்டப்பட்டன. BMP ரக பீரங்கி-கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றின் பயிற்சியையும் பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிற்கு விளக்கப்பட்டது. அப்போது Pika எந்திரத் துப்பாக்கியை, பாதுகாப்பு அமைச்சர் சோதித்துப் பார்த்தார். எல்லைகளை பாதுகாத்து நிற்கும் வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து திறமைகளை வெளிப்படுத்தினர். போரில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். 

இதைத் தொடர்ந்து, லடாக்கின் லூக்குங் பகுதிக்கு சென்ற ராஜ்நாத் சிங், படை வீரர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்திய-சீன வீரர்களிடை ஏற்பட்ட மோதலை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், எல்லையை பாதுகாக்கும் உன்னதப் பணியில் இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததாக குறிப்பிட்டார்.

வீரர்களின் உயிரிழப்பு துயரத்தை ஏற்படுத்துகிறது என்றும், வீரமரணம் அடைந்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார். உலகின் எந்த சக்தியாலும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட அபகரித்து விட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

லடாக் பயணத்தை முடித்துக் கொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றார். ஜம்மு-காஷ்மீரில் நாளை முன்களப் பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார்.


Advertisement
விஜயுடன் இணைந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால் கூட்டணி மாற்றம் என்று கருத வேண்டாம் : திருமாவளவன்
பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மீது கார் மோதி விபத்து .!
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதின்படி செயல்படுவோம் - அமைச்சர் சேகர்பாபு
மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை : இ.பி.எஸ் குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..
சீமானுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து.!
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் சாலை விபத்து.!
வி.சி.க. கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம்... பா.ம.க. வன்முறையை தூண்டுகிறது - திருமாவளவன்
இந்திய கடற்படையின் செயல்பாடுகளை பார்வையிட்ட குடியரசு தலைவர்.!
சாலையோரம் நின்று செல்போன் பேசிய பைக் ஓட்டி மீது தாக்குதல்.!

Advertisement
Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..


Advertisement