தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசு நடத்திய துறைபூர்வ விசாரணையை அடுத்து, முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளரும், ஐடி துறை செயலாளருமாக இருந்த சிவசங்கர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
மாநில தலைமைச் செயலாளர் மற்றும் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆகியார் நடத்திய விசாரணையில் அகில இந்திய பணிகளுக்கான சட்டங்களை சிவசங்கர் மீறியது கண்டுபிடிக்கப்பட்டதால் சஸ்பென்ட் செய்யப்பட்டதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 3 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஃபைசல் பரீதின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் தங்கி இருந்த ஃபைசல் பரீது தலைமறைவாகி உள்ள நிலையில், அவரை பிடிக்க இன்டர்போல் வழியாக புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும் ஏற்பாடு நடப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திருவனந்தபுரம் யுஏஇ துணைத் தூதரக முக்கிய அதிகாரி அவசரம் அவசரமாக துபாய் சென்று விட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.