கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வரும் நிலையில், அவற்றுக்கான சில கட்டுப்பாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு மட்டுமே நடத்த வேண்டும்.1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு நாளில், 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு நாளில் 4 ஆன்லைன் வகுப்புகள் 45 நிமிடங்கள் மிகாமல் இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாட்டு விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.