கடந்த ஆண்டைவிட 5.38 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 88.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.19 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.15 சதவீதமாகவும் உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக, திருவனந்தபுரம் மண்டலத்தில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கடுத்தபடியாக பெங்களூரு மண்டலத்தில் 97.05 சதவீதம் பேரும், சென்னை மண்டலத்தில் 96.17 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 11 லட்சத்து 92 ஆயிரத்து 961 பேர் தேர்வு எழுதியதில், 38 ஆயிரத்து 686 மாணவர்கள், அனைத்து பாடங்களிலும் 95 சதவீதத்திற்கும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கொரோனா காரணமாக, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட பாடங்களுக்கு, மாற்று மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட்டது. எழுதாத தேர்வுகளுக்கு, இன்டர்னல், செய்முறை, பிராஜெக்ட், எழுதிய தேர்வுகளில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் அளவுக்கு நிலைமை சீரடைந்த பிறகு, விருப்பமுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ளவும் சிபிஎஸ்இ வாய்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
class="twitter-tweet">Central Board of Secondary Education (CBSE) Class 12 exam results announced. Overall Pass Percentage is 88.78%. pic.twitter.com/MKswRe5NpA
— ANI (@ANI) July 13, 2020