உலக அளவில் புதிதாக ஒரு லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 14 லட்சத்தை நெருங்குகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு நாடுகளில் 4 ஆயிரத்து 500 பேர் வரை பலியானதால், மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 5 லட்சத்து 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் புதிதாக 45 ஆயிரம் பேருக்கும், பிரேலிலில் 35ஆயிரம் பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பிரேசில் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் ஆயிரத்து111 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
அதற்கு அடுத்தபடியாக, மெக்சிகோவில் ஒரே நாளில் 654 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக தென் ஆப்பிரிக்காவில் ஒரே நாளில் 10ஆயிரத்து 500 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களில் 58ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 64லட்சத்து 39ஆயிரமாக அதிகரித்துள்ளது.