சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ் எங்கு உள்ளார் என்பதை அறிய அவரது உறவினரை விளாத்திகுளம் காவல் நிலையத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட இரண்டு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தலைமறைவாக உள்ள காவலர் முத்துராஜை பிடிக்கும் பணியை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
விளாத்திகுளம் பகுதியில் உள்ள முத்துராஜின் உறவினரை விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் முத்துராஜ் எங்கும் தப்பிச் சென்று விடாமல் சோதனை சாவடிகளிலும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.