புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
முதலமைச்சர் நாராயணசாமியால் நேற்று முன்தினம் புதிய கட்டுப்பாடுகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும், மதுபான கடைகளும், பெட்ரோல் பங்குகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் காலை 6 மணிமுதல் 2 மணிவரை அமர்ந்து உண்ணவும், இரவு 8 மணிவரை பார்சல் வாங்கி செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதோருக்கு விதிக்கப்பட்ட 100 ரூபாய் அபராதம் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் 10நாட்களுக்கு நடைபயிற்சி உள்ளிட்டவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பால் விற்பனையகங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும், மருந்து கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.