செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் ஒருபோதும் வீண்போகாது...

Jun 20, 2020 12:12:11 PM

எந்த விலை கொடுத்தும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம் என்பதையே, கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களின் வீரம்செறிந்த நடவடிக்கை காட்டுவதாக, விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா கூறியுள்ளார். இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் வீண்போக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஹைதராபாத்தில் உள்ள, இந்திய விமானப் படை அகாடமியில் பயிற்சி முடித்து, பணியில் சேரும் 123 விமானப்படை அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா முன்னிலையில், இந்த கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய விமானப் படை தளபதி, கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்த்தியாகம் செய்த கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் அவரது தலைமையில் சென்ற வீரர்களுக்கு புகழாரம் சூட்டினார். மிகவும் சவாலான சூழ்நிலையில், இந்திய ராணுவத்தினரின் வீரம்செறிந்த நடவடிக்கை, எத்தகைய விலை கொடுத்தும் இந்திய இறையாண்மையை காக்கத் தயங்க மாட்டோம் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

படைகளின் வீரர்கள் எப்போதும் தயார்நிலையில், விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், லடாக்கில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் நடைபெற்ற சம்பவம், வீரர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையை கையாள தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் என்று கூறினார்.

உரிய தயாரிப்புகளோடு ஆயத்த நிலையிலும், எத்தகைய அவசர, நெருக்கடி சூழ்நிலையை கையாளும் வகையிலும் விமானப் படை உள்ளது என்று தெரிவித்த பதாரியா, கால்வன் பள்ளத்தாக்கில் வீரர்களின் உயிர்த் தியாகம் ஒருபோதும் வீண்போகாது என தேசத்திற்கு உறுதியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோடாக இருந்தாலும், அதைத் தாண்டியும் உள்ள படை நிலை குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், முழுமையாக ஆய்வு செய்து, எதிர்வரும் எத்தகைய நெருக்கடியையும் கையாளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விமானப் படை தளபதி கூறினார்.

ராணுவ அதிகாரிகள் நிலையில் நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு ஏற்பட்ட பிறகும், உயிரிழப்புகளுக்கு வித்திடும் வகையில் சீனா நடந்து கொண்ட முறை ஏற்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில் அமைதியான முறையில் தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்.கே.எஸ்.பதாரியா தெரிவித்தார்.


Advertisement
கொடைக்கானல் அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய பொலிரோ ஜீப்.. பிரேக் பிடிக்காததால் மலையில் உருண்டதாக தகவல்..!
ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக உதவி கேட்ட நபர்.. ஏ.டி.எம் அட்டையைத் திருடி பணத்தை எடுத்த கேடி..!
தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் அமைகிறது சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்
நெஞ்சுவலியால் கீழே விழுந்த வாகன ஓட்டியை காப்பாற்றிய போக்குவரத்து போலீசார்.. பாராட்டு, வெகுமதி அளிப்பு..!
த.வெ.க மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை கௌரவிக்கம் தலைவர் விஜய்..
கருங்கல்லூரில் கத்தை கத்தையாக ரூ 500 நோட்டுக்களுடன் சூதாட்டம்..
விஜயுடன் இணைந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால் கூட்டணி மாற்றம் என்று கருத வேண்டாம் : திருமாவளவன்
பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மீது கார் மோதி விபத்து .!
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதின்படி செயல்படுவோம் - அமைச்சர் சேகர்பாபு
மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை : இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Advertisement
Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..


Advertisement