லடாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்.
காணொலி வாயிலாக நடக்கும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஆம் ஆத்மி, ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் குறை கூறி உள்ளன.