சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் மேலும் 12 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்று அந்த காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காப்பகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
மற்றவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் மேலும் 12 சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் அரசு தொற்று நோய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஆதாரவற்ற குழந்தைகள் 55 பேர் ராயபுரம் காப்பகத்தில் 2 மாதங்களாக தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள சிறுவர்கள் அருகிலுள்ள சமூக நல கூடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.