பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் ஏழை மக்களுக்கான ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியான மோகன் என்பவரது மகள் நேத்ரா. 9-ம் வகுப்பு பயிலும் இந்த மாணவி தனது எதிர்கால கல்விக்கு சேமித்து வைத்திருந்த சுமார் 5 லட்ச ரூபாய் பணத்தை கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்படோர்க்கு உதவி செய்துள்ளார்.
இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வாரம் மான்கீபாத் உரையின் போது, நேத்ராவுக்கும் அவர் குடும்பத்திற்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில், மாணவி நேத்ராவை ஏழை மக்களின் நலனுக்கான ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக நியமித்து ஒரு லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி ஐ.நா. அமைப்பு கௌரவித்துள்ளது.
அதுமட்டுமின்றி நியூயார்க், ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் மாநாட்டில் உரையாற்ற நேத்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.