நடப்பு மே மாதத்தில் இதுவரை இல்லாத விதமாக சுமார் ஆயிரம் புள்ளிகள் ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
காலையில் வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. பின்னர் ஷார்ட் கவரிங் முறையில் வங்கி பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதால், சென்செக்ஸ் 996 புள்ளிகளும், நிப்டி 285 புள்ளிகளும் ஏற்றமடைந்தன. வங்கி, நிதி, உலோகம், ஐடி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், மருந்து துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமானது.
அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து 75 ரூபாய் 71 காசுகளாக இருந்தது.