புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதாக கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக விலைக்கு நிகரான விலையுடன் புதுச்சேரியிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்றும், இந்த வரி விதிப்பு அடுத்த 3 மாதங்கள் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என்றும், ஒரு நபர் நான்கரை லிட்டர் வரை மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
மதுவாங்க வருவோர் முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பது அவசியம் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.