மே.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
நாடு தழுவிய அளவில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை மே.31 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு
விமான போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைக்கான தடை தொடரும்
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை நீடிப்பு
தியேட்டர்கள், மால்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றிற்கான தடை தொடரும்
மத வழிப்பாட்டுதலங்கள், அனைத்துவித மத நிகழ்ச்சிகளுக்கான தடை தொடர்ந்து நீடிப்பு
மாநிலங்களுக்குள் பயணிகள் பேருந்து போக்குவரத்தை, அந்தந்த மாநில அரசு அனுமதித்தால் இயக்கலாம்
மாநிலங்களுக்குள்ளாக பேருந்து போக்குவரத்தை இயக்குவது அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம்
விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கான தடை தொடர்ந்து நீடிக்கும்
சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் எவற்றை அனுமதிப்பது என்பது பற்றி அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்
ஊரடங்கில் தளர்வுகளை அனுமதிக்குபோது, கொரோனா தடுப்புக்கான பொது வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்
ஜிம், நீச்சல் குளங்கள், வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்
நோய் தடுப்பு பகுதிகளில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்
நோய் தடுப்பு பகுதிகளில், மருத்துவ தேவைகளுக்காக தவிர பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், வீடு, வீடாக சென்று, மருத்துவக் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்
இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர யாரும் வெளியில் செல்லக் கூடாது
65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமிகள் வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும்
தீவிரமான உடல் உபாதைகள் உடையோர், கர்ப்பிணிகள், அத்தியாவசிய தேவைகளைத் தவிர வெளியில் வரக்கூடாது
விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி - ஆனால், பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது
பணியிட பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பணியாளர்கள் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த வேண்டும்
அனைத்துவித சரக்கு போக்குவரத்தும் தடையின்றி நடைபெறுவதை, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்
ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தலை ஊக்குவிக்க வேண்டும்
தொலைதூர படிப்புகளுக்கான சிறப்பு வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்தவும் பரிந்துரை
ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கான தடை தொடரும் - பார்சல்களுக்கு மட்டும் அனுமதி
ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு
பொது இடங்களுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்
பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை - மீறினால் அபராதம் விதிக்கப்படும்
அனைத்து பொது இடங்களிலும் தனி நபர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
பொதுமக்களோடு தொடர்புடைய பணிகளில் இருப்பவர்கள் மாஸ்க் உடன் ஹெல்மெட் போன்ற மாஸ்க் கவர்களை அணிய வேண்டும்
திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில், 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி
பொது இடங்களில், மது அருந்துவது, பான், குட்கா, புகையிலை பொருட்களை உட்கொள்வதற்கு அனுமதி கிடையாது