செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடியான நாடாக உள்ளது- மத்திய நிதி அமைச்சகம்

May 15, 2020 04:52:41 PM

பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடியான நாடாக உள்ளது

கரும்பு உற்பத்தி மற்றும் மீன் பிடித் தொழிலிலும் இந்தியா முன்னணியில் உள்ளது

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு 8 திட்டங்கள், நிர்வாக கட்டமைப்புகளுக்கு 3 திட்டங்கள்

குறைந்த பட்ச ஆதார விலையின் அடிப்படையில் ஊரடங்கின் போது மட்டும் ரூ.74,300 கோடி ரூபாய்க்கு கொள்முதல் நடைபெற்றுள்ளது

பிரதமரின் கிஷான் நிதியில் இருந்து ரூ.18,700 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது

பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தில் ரூ.6400 கோடி வரை விவசாயிகளால் கோரப்பட்டுள்ளது

ஊரடங்கின் போது பாலின் தேவை 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது

தினமும் 360 லட்சம் லிட்டர் பால் தேவை என்கிற நிலையில் ஊரடங்கின் போது தினமும் 560 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டது

கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட பால் சுமார் 4100 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

மார்ச் மாதத்துடன் அங்கீகாரத்தை இழந்த 242 இறால் பண்ணைகள் மேலும் 3 மாதங்கள் செயல்பட அனுமதி

இறால் இறக்குமதிக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

வேளாண் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

அறுவடைக்கு பிந்தையை வேளாண் தேவைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி பயன்படுத்தப்படும்

வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான ரூ.1 லட்சம் கோடி உடனடியாக விடுவிக்கப்படும்

வேளாண் பொருட்கள் கொள்முதலுக்கான நேரடி மையங்களை மேம்படுத்தவும் ரூ.1 லட்சம் கோடி நிதி பயன்படுத்தப்படும்

ரூ.10 ஆயிரம் கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும்

நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் உள்ளூர் உணவுப் பொருட்கள் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்

நுண் உணவு உற்பத்தி நிறுவனம் மூலம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேச தரத்தில் செயல்பட உதவி செய்யப்படும்

ரூ.10 ஆயிரம் கோடி நிதி மூலம் சுமார் 2 லட்சம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் பலன் அடையும்

மகளிர் சுய உதவிக்குழுக்கள், வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்களும் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் மூலம் பலன் அடைவர்

ரூ.10 ஆயிரம் கோடியில் உருவாகும் நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் தமிழகத்தின் மரவள்ளிக் கிழங்கு சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்

உபியின் மாம்பழம், காஷ்மீரின் குங்குமப்பூ, ஆந்திராவின் மிளகாயும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்

பிரதமரின் மட்ஸ்சய சம்பதா யோஜனா திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கடல் மீன் பிடிப்பு, உள்ளூர் நீர் நிலைகளில் மீன்பிடிப்பு மற்றும் வண்ண மீன் பண்ணைகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டங்கள்

மீன்பிடித்துறைமுகங்கள், மீன்களை பதப்படுத்தி வைக்கும் அமைப்புகள் மற்றும் சந்தைகளை மேம்படுத்த ரூ.9 ஆயிரம் கோடி

புதிய திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மீன் உற்பத்தி 70 லட்சம் டன் அளவிற்கு உயரும்

ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தின் மூலம் 55 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், ஏற்றுமதி இரட்டிப்பாகி ரூ.1 லட்சம் கோடியாக உயரும்

தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் ரூ.13,343 கோடியில் செயல்படுத்தப்படும்

தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் மூலம் 100 சதவீதம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்

தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தில் சுமார் 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்

தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தில் இதுவரை 1.5 கோடி மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கால்நடை பராமரிப்பு உள் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

பால் வளத்துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும்

பால் மூலமான மதிப்பு கூட்டு பொருட்கள் சார் தொழிலிலும் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்படும்

பால் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்

மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு

தேசிய மூலிகை பண்ணை வாரியத்தின் ஆதரவுடன் 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மூலிகை தாவரங்கள் பயிரிடப்பட்டு

ரூ.4000 கோடி செலவில் 10 லட்சம் ஹெக்டேரில் அடுத்த 2 ஆண்டுகளில் மூலிகைத் தாவரங்கள் பயிரிடப்படும்

மூலிகைத் தாவரங்கள் பயிரிடுவதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.5000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்

மூலிகை தாவரங்களுக்கு பிராந்திய அளவிலான மண்டிகள் அமைக்கப்படும்

கங்கை நதிக்கரை ஓரத்தில் 800 ஹெக்டேர் பரப்பில் தேசிய மூலிகை பண்ணை வாரியத்தின் மூலம் மூலிகைகள் வளர்க்கப்படும்

தேனீ வளர்ப்பிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

தேனீ வளர்ப்பு, தேன் சேகரிப்பு மற்றும் சந்தை படுத்ததலுக்கு தேவையான கட்டமைப்புகளை அரசு உருவாக்கும்

ரூ.500 கோடி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும 2 லட்சம் தேனீ வளர்ப்பாளர்களின் வருவாய் பெருகும்

தக்காளி, வெங்காயம், உருளை விவசாயிகளுக்கான வசதிகள் அனைத்து காய்கறி, பழங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு விரிவுபடுத்தப்படும்

ஆப்பரேசன் பசுமை திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

ஆப்பரேசன் பசுமை திட்டம் என்பது அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விநியோக சங்கிலியை உருவாக்குவது

அபரிமிதமான வளர்ச்சி உள்ள இடங்களில் இருந்து பற்றாக்குறை இடங்களுக்கு விவசாய பொருட்களை அனுப்பினால் 50 சதவீதம் போக்குவரத்து மானியம்

குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சாதாரண கிடங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிக்க 50 சதவீதம் மானியம்

எளிதில் அழியக்கூடிய காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு சலுகைகள் நீட்டிப்பு

விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்

சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், பருப்புகள்,வெங்காயம், உருளை ஆகிய வேளாண் பொருட்களை விவசாயிகள் அதிக இருப்பு வைக்க வழிவகை


விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சரியான விலையில் விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய சட்டம்


Advertisement
வயல் வெளியில் உலாவிய முதலை மீட்பு - வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் கொடுத்த மக்கள்..
த.வெ.க. மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என தகவல்..
தலப்பாகட்டி ஹோட்டல் வெஜிடபிள் பிரியாணியில் கிடந்த பூரான் - போலீஸார் விசாரணை
ஆவடி ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் பயணிகள்..
மதுபோதையில் பேருந்தை இயக்கிய பேருந்து பணிமனை மெக்கானிக் - காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து
பழநி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வி.சி.க தலைவர் திருமாவளவன் .!
கோவை அருகே ஏடிஎம் மில் பணம் எடுத்துத் தருவது போல் மோசடி செய்த நபர் கைது
முடங்கிய கோயம்பேடு மார்க்கெட் - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்..
சாய்ராபானுவுடன் விவாகரத்து- ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்..
சென்னையில் இளைஞர் மற்றும் இளம் பெண் மீது கத்தியால் தாக்கிய மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement