சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள பாடங்களுக்கான தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியதும், முன்னெச்சரிக்கையாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஏற்கெனவே நடந்து வந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அப்போது சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் 29 மெயின் பாடங்களுக்கான தேர்வுகள் எப்போது நடத்தப்படுமென கேள்வியெழுந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், எஞ்சியுள்ள சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புகளுக்கான பாடத் தேர்வுகள், ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.