சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தவர்களில் இன்று மட்டும் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 700 பேர் வரை தற்போது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று 107 நபர்களுக்கும், இன்று மட்டும் 68 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இன்னும் 217 நபர்களுக்கு சோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதுவரை கடலூர் மாவட்டத்தில் 229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.