சென்னையில் டாஸ்மாக் கடைகள் வரும் 7ம் தேதி திறக்கப்படாது என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. 144 தடையால் தமிழகத்தில் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், டாஸ்மாக் கடைகள் 7ம் தேதி முதல் நிபந்தனைகளுடன் திறக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா வில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், தமிழக எல்லைப்புற மாவட்டங்களில் இருந்து அங்கு அதிகளவில் மது பிரியர்கள் செல்வதை கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் 7ம் தேதி திறக்கப்படாது என்றும், திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.