சென்னையில் கொரோனாவின் மையப்புள்ளியாக மாறி வரும் கோயம்பேடு சந்தையில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் என 41 பேருக்கு நோய்த்தொற்று ஏற்கனவே உறுதியாகியிருந்தது. இதையடுத்து, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்ற வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதில், மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களில் ஒருவர், நேற்று முன் தினம் சி.எம்.டி.ஏ. சார்பில் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாகவே முன்வந்து தனிமைபடுத்தி கொள்ளவும், பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது