ஏர் இந்தியா நிறுவனம் மே நான்காம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வும், ஜூன் ஒன்றாம் தேதி முதல் பன்னாட்டு விமானங்களில் பயணம் செய்யவும் முன்பதிவைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜூன் 25 ஆம் தேதி முதல் மே மூன்றாம் தேதி வரை நாற்பது நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் சாலை வழி வாகனப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகியனவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்குக்கு முன்பே பன்னாட்டு விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மே நான்காம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களிலும், ஜூன் ஒன்றாம் தேதி முதல் பன்னாட்டு விமானங்களிலும் பயணம் செய்வதற்கான முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.
மேலும் அறிய : http://www.airindia.in/