கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட அவர் வீட்டுத் தனிமையில் இருந்து வந்தார். ஞாயிற்றுக் கிழமை லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 3 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் அவர் உடனடியாக பணிக்குத் திரும்ப மாட்டார் என்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான செக்கர்சில் (Chequers) தனிமையில் ஓய்வெடுப்பார் என்றும் கூறினார். தனது வாழ்க்கையை மீட்டுத் தந்த மருத்துவக் குழுவினருக்கு கடமைப் பட்டிருப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.