இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தத் தவறினால் அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அவரது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆடு மற்றும் மாட்டிறைச்சிகள் சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இறைச்சிக் கூட முத்திரையின்றி விற்கப்பட்டால் தொடர்புடைய கடைக்கு சீல் வைக்கப்பட்டு, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆடு, மாடு, கோழி இறைச்சிக் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது கடை உரிமையாளரின் பொறுப்பு என்றும், அதனை உறுதிப்படுத்தத் தவறினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.