செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொரோனா எதிரொலி -ஜி 20 தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

Mar 27, 2020 01:16:24 PM

அனைத்து மக்களுக்கும் நியாயமான கட்டணத்தில் உயர்ந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜி 20 காணொலி மாநாட்டில் பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளுடன் ஜி20 நாடுகளின் மாநாடு காணொலி மூலம் தொடங்கியது. இதற்கு சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையேற்றார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பிரதமர் மோடி, மருத்துவ ஆய்வுகள், மருத்துவ தகவல்களை பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். கொரோனா போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அனைத்து மக்களுக்கும் நியாயமான கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய மோடி, லாப நோக்கை மறந்து மக்களின் நலன்களை முதன்மையாக்கிக் கொள்ளுமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.

கோவிட் 19 நோய்க்கு பலியானவர்களில் 88 சதவீதம் பேர் ஜி 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதையும் மோடி சுட்டிக் காட்டினார். கொரோனா எத்தனைக் காலத்துக்கு நீடிக்கும் என்று எந்த நாட்டினராலும் வரைமுறை வகுக்க முடியவில்லை. எனவே நோய் பரிசோதனைக் கருவிகள் அதிக அளவில் உற்பத்தி செய்து அவை உடனுக்குடன் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவத் தொடங்கி 3 மாதங்களாகியும் இன்னும் அதற்கு ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதையும் மோடி தமது பேச்சில் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் ஐஎம்எப், ஐநா.சபை, மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்களும் பங்கேற்றனர்.

சுமார் 5 லட்சம் கோடி டாலர் நிதியை கொரோனாவுக்கு எதிரான யுத்தத்திற்காகவும் உலகப் பொருளாதார சீரமைப்புக்காகவும் அளிக்க ஜி 20 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.


Advertisement
புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்றதாக சினிமா உதவி இயக்குநர் கைது
திண்டுக்கல் அருகே தனியார் ஆம்னிப் பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
பொள்ளாச்சி அருகே சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி
புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ரகுபதி ஆய்வு
சாலையில் தேங்கிய மழைநீரில் அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 நாய்கள் பலி
கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
லெபனான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்.. அவசர அவசரமாக சொகுசு படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்
பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்.. 11 பேர் உயிரிழப்பு
கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்.. விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தேங்கிய தண்ணீர்

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement