சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில், அதனை அமல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், சுகாதாரத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 3 மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் 3 மாவட்டங்களையும் தனிமைப்படுத்தும் பட்சத்தில், விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள், பொதுமக்கள் பாதிக்கபடாத வகையில் அத்தியாவசிய தேவைகள் தடைபடாதவாறு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.