கொரோனா வைரசை எதிர்த்துக் கொல்லும் திறன் கொண்ட மருந்துகளின் பெயர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கடந்த 18ம் தேதி டிவிட்டரில் தகவல் தெரிவித்திருந்த டிரம்ப், கொரோனா வைரஸ் தொடர்பாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையிடம் இருந்துவந்த ஒரு முக்கியமான தகவல் தொடர்பாக விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாறில் மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.