கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை துவங்கிய போதிலும், சற்றே மீட்சியடைந்து உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 515 புள்ளிகள் வரையிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 150 புள்ளிகள் வரையிலும் சரிவுடன் தொடங்கின.
பின்னர் சற்றே மீண்ட நிலையில் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து 31 ஆயிரத்து 870 புள்ளிகளாக வர்த்தகமானது. நிப்டியும் 147 புள்ளிகள் உயர்ந்து 9 ஆயிரத்து 344 புள்ளிகளாக வர்த்தகமானது. சன் பார்மா, டாட்டா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், பவர்கிரிட், இண்டஸ் இண்ட் வங்கி, ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் 6.78 சதவீதம் உயர்ந்து லாபம் ஈட்டின.