கொரானா வைரஸ் பரவல் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் வணிகநேரத் தொடக்கத்திலேயே கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
தொழில், வணிகத் துறைகளில் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் கடந்த 3 வாரங்களாகப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இரண்டாயிரத்து 29புள்ளிகள் சரிந்து 32,074 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 596 புள்ளிகள் சரிந்து ஒன்பதாயிரத்து 359 ஆக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்கள், வங்கிகளின் பங்குகள் பத்து விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தன.