கொரானா வைரஸ் பரவல் எதிரொலியாகத் தொடக்கத்தில் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த பங்குச்சந்தை வணிகம், இறுதியில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. கொரானா வைரஸ் எதிரொலியால் இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகநேரத் தொடக்கத்தில் பத்து விழுக்காட்டுக்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதனால் 45 நிமிடத்துக்கு வணிகம் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் வணிகம் தொடங்கியபோது, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மூவாயிரத்து 518 புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தை நிப்டி ஆயிரத்து 36 புள்ளிகளும் சரிந்தன.
அதன் பின்னர் சரிவில் இருந்து மீண்டு வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 1325 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 103 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 433 புள்ளிகள் உயர்ந்து பத்தாயிரத்து 24 ஆக இருந்தது. வங்கி, உலோகம், பெட்ரோலியத் தொழில் நிறுவனங்களின் பங்கு விலைகள் பத்து விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்தன.