செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"விஜய் வரி ஏய்ப்புச் செய்யவில்லை" - விசாரணைக்குப் பின் IT தகவல்

Mar 12, 2020 09:45:35 PM

நடிகர் விஜய் வீட்டில், சீலிடப்பட்ட லாக்கரில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட வருமானவரித்துறை, நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்யவில்லை எனக் கூறியுள்ளது. 

பிகில் பட வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் கடந்த மாதம் ஏ.ஜி.எஸ். நிறுவனம், பைனான்சியர் அன்புச் செழியன், நடிகர் விஜய் ஆகியோர் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது மாஸ்டர் பட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் விஜய் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விஜய் வீட்டில் சில ஆவணங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அவற்றை வெளியே எடுக்க தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் நடிகர் விஜய் வீட்டில் 8-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் விஜய் வீட்டில் உள்ள அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நடிகர் விஜய் பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் ஊதியமாக பெற்றுள்ளதாகவும், 2 திரைப்பட வருவாய்க்கும் அவர் முறையாக வரி செலுத்தியுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 


Advertisement
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
வயல் வெளியில் உலாவிய முதலை மீட்பு - வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் கொடுத்த மக்கள்..
த.வெ.க. மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என தகவல்..
தலப்பாகட்டி ஹோட்டல் வெஜிடபிள் பிரியாணியில் கிடந்த பூரான் - போலீஸார் விசாரணை
ஆவடி ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் பயணிகள்..
மதுபோதையில் பேருந்தை இயக்கிய பேருந்து பணிமனை மெக்கானிக் - காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து
பழநி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வி.சி.க தலைவர் திருமாவளவன் .!
கோவை அருகே ஏடிஎம் மில் பணம் எடுத்துத் தருவது போல் மோசடி செய்த நபர் கைது
முடங்கிய கோயம்பேடு மார்க்கெட் - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்..
சாய்ராபானுவுடன் விவாகரத்து- ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்..

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement