என்.பி.ஆர். தொடர்பான தமிழக அரசின் கேள்விகளுக்கு மத்திய அரசின் பதில் கிடைக்காததால் தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட என்.பி.ஆர். சட்டத்தை சட்டமன்றத் தீர்மானம் கட்டுப்படுத்தாது என விளக்கம் அளித்த அவர், எனினும் சட்டத்தில் உள்ள சில விவரங்கள் குறித்து விளக்கம் கோரி தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
கண்களை இமை காப்பது போல், சிறுபான்மை மக்களை ஆளும் அதிமுக அரசு பாதுகாத்து வருவதாகவும், இஸ்லாமிய சமுதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக அதிமுக விளங்குவதாகவும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.