ஹைதராபாத்தில் கொரானா வைரஸ் அறிகுறிகளுடன சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சவூதி அரேபியா நாட்டுக்கு சென்று வந்த கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் இந்தியா திரும்பிய நிலையில் அவருக்கு கொரானா அறிகுறி இருந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரானா வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகத்தில் அவர் கண்காணிப்பிலும் இருந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று (tuesday) உயிரிழந்துள்ளார். இதனால் அவர் மரணத்திற்கு கோவிட் 19 நோய் காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்ய மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.