கேரளாவில், மேலும் 5 பேர், கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனை, அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இவர்களில் 3 பேர், அண்மையில் இத்தாலியில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் .
எஞ்சிய 2 பேர், பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கேரளாவின் முதல் கொரானா வைரஸ் பாதிப்பு, மருத்துவ மாணவர் ஒருவருக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இப்போது, மேலும் 5 பேர் கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி ஆகி விட்டதால், கேரளா முழுவதும் உஷார் படுத்தப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதனிடையே, இந்தியா முழுவதும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.