மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து, 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.
மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, அதிரடியாக விளையாடி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை குவித்தது.
இதையடுத்து 185 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம்புகுந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பந்துவீச்சில் நிலை குலைந்தது. நட்சத்திர வீராங்கனைகளான சபாலி வர்மா 2 ரன்னிலும், மந்தனா 11 ரன்னிலும் வெளியேற, அதை தொடர்ந்து வந்தோரும் பெவிலியனுக்கு நடையை கட்டியபடி இருந்தனர்.
19.1 ஆவது ஓவரில் 99 ரன்களை எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்து விட்டது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி, 85 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வென்று உலக கோப்பையை தக்க வைத்து கொண்டது.