கோவையில் இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதைக் கண்டித்து அந்த அமைப்பின் சார்பிலும் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சார்பிலும் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தால் பல இடங்கள் வெறிச்சோடியுள்ளன.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செயலாளரான குறிச்சி ஆனந்த் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஒருநாள் கடையடைப்புக்கு அந்த அமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேபோல் குடியுரிமை திருத்தத் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சார்பிலும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், உக்கடம், ஒப்பணக்கார வீதி, டவுன் ஹால், காந்திபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.