கொரானா வைரஸ், யெஸ் வங்கி பிரச்சினை உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
வராக்கடன்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தைக் ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளதால் பொருளாதாரம் சார்ந்த நம்பிக்கையின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் இந்திய பங்குச் சந்தைகள் காலையில் சரிவுடனேயே தொடங்கின. சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1450-க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்தது.
பின்னர் மீண்ட போதிலும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 893 புள்ளிகள் சரிவுடன் 37,576 ஆக இருந்தது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் அதிகபட்சமாக 441 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 279 புள்ளிகள் சரிவுடன் 10,989 ஆக இருந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் சரிந்து, 73 ரூபாய் 78 காசுகளாக இருந்தது.